Page Loader
இந்தியா ஓபன் 2023 : உலக சாம்பியனை வீழ்த்தி பட்டம் வென்றார் குன்லவுட் விடிட்சார்ன்!
உலக சாம்பியனை வீழ்த்தி பட்டம் வென்றார் குன்லவுட் விடிட்சார்ன்

இந்தியா ஓபன் 2023 : உலக சாம்பியனை வீழ்த்தி பட்டம் வென்றார் குன்லவுட் விடிட்சார்ன்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 23, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்ன், இரண்டு முறை உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை வீழ்த்தி இந்தியா ஓபன் சூப்பர் 750 பட்டத்தை வென்றார். ஆக்செல்சென் தொடக்கச் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-14, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ரி16 இல் அவர் சீனாவின் ஷி யுகியை 21-16, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் வென்றார். ஆக்செல்சென் தனது சகநாட்டவரான ராஸ்மஸ் கெம்கே காலிறுதி ஆட்டத்தின் நடுவே காலில் காயம் அடைந்ததால் அரையிறுதிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியிலும் ஆக்செல்சென் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடிட்சார்னுக்கு எதிராக நேற்று (ஜனவரி 23) தோல்வியடைந்தார்.

குன்லவுட் விடிட்சார்ன்

ஆக்செல்சனுக்கு எதிராக விடிட்சார்னின் முதல் வெற்றி

தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்ன் இந்தியா ஓபன் 2023 இறுதிப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க்கின் ஆக்செல்சனை 64 நிமிடங்களில் 22-20, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 போட்டிப் பட்டத்தை வென்றார். இது ஆக்செல்சனுக்கு எதிராக விடிட்சார்னின்முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நேற்று (ஜனவரி 23) பெண்களுக்கான இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் அன் சே யங் 15-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி 6-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.