விஜய் ஹசாரே கோப்பை : நாக் அவுட் போட்டிகளின் முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் நாக் அவுட் போட்டிகள் டிசம்பர் 9 முதல் 16 வரை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (டிச.5) முடிவடைந்த லீக் சுற்றில் இருந்து மொத்தம் 10 அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன.
மும்பை, ஹரியானா, ராஜஸ்தான், விதர்பா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிகள் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் காலிறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
காலிறுதியில் எஞ்சிய இரண்டு இடங்களுக்கு கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போராடும்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.
Vijay Hazare Trophy Knock out teams, Match details
விஜய் ஹசாரே கோப்பை நாக் அவுட் போட்டியின் முழு அட்டவணை
காலிறுதிக்கு முந்தைய தகுதிச் சுற்று 1: பெங்கால் vs குஜராத் - டிசம்பர் 9
காலிறுதிக்கு முந்தைய தகுதிச் சுற்று 2: கேரளா vs மகாராஷ்டிரா - டிசம்பர் 9
காலிறுதி 1: ஹரியானா vs தகுதிச் சுற்று 2 வெற்றியாளர் - டிசம்பர் 11
காலிறுதி 2: ராஜஸ்தான் vs தகுதிச் சுற்று 1 வெற்றியாளர் - டிசம்பர் 11
காலிறுதி 3: விதர்பா vs கர்நாடகா - டிசம்பர் 11 காலிறுதி 4: மும்பை vs தமிழ்நாடு - டிசம்பர் 11
Vijay Hazare Trophy Knockout Stage schedule
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி அட்டவணை
அரையிறுதி 1: காலிறுதி 1 வெற்றியாளர் vs காலிறுதி 4 வெற்றியாளர் - டிசம்பர் 13
அரையிறுதி 2: காலிறுதி 2 வெற்றியாளர் vs காலிறுதி 3 வெற்றியாளர் டிசம்பர் 14
இறுதிபோட்டி : அரையிறுதி 1 வெற்றியாளர் vs அரையிறுதி 2 வெற்றியாளர் - டிசம்பர் 16
38 அணிகள் போட்டியிடும் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையை அதிக முறை வென்ற அணியாக தமிழ்நாடு கிரிக்கெட் அணி உள்ளது.
தமிழ்நாடு 5 முறை பட்டம் வென்றுள்ள நிலையில், மும்பை மற்றும் கர்நாடக அணிகள் தலா 4 முறை கோப்பையை வென்றுள்ளன.