Page Loader
2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!
2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி?

2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் போட்டியின் போது ஸ்டேண்டில் அமர்ந்திருந்த கிரிக்கெட் ரசிகரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் உள்ள சம்பந்தப்பட்ட அந்த நபர் பார்ப்பதற்கு எம்எஸ் தோனி போலவே தோற்றம் கொண்டுள்ளார். தோனிக்கு வயதானால் எப்படி இருப்பாரோ அச்சு அசலாக அப்படியே தோற்றம் கொண்டுள்ளதால், ரசிகர்கள் அவரை '2040இல் இருந்து வந்த எம்எஸ் தோனி' என்று கேலியாகக் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் தோனியே டைம் ட்ராவல் மூலம் காலத்தை கடந்து பழைய காலத்திற்கு வந்துள்ளதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Instagram அஞ்சல்

Instagram Post