'யுவராஜ் கொடுத்த 30 நிமிட டிப்ஸ்': 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில், 15 வயதான இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். மொத்தம் 53 பந்துகளைச் சந்தித்த அவர், 28 இமாலய சிக்ஸர்களுடன் 204 ரன்கள் குவித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். முன்னதாக கடந்த இரு போட்டிகள் மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் ரன் குவிக்கத் தடுமாறிய வைபவ், இந்தப் போட்டியின் மூலம் தனது விஸ்வரூபத்தைக் காட்டி இந்திய 'ஏ' அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நெகிழ்ச்சி
யுவராஜ் கொடுத்த 30 நிமிட டிப்ஸ்
இந்த சாதனைக்குப் பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, தனது ரோல் மாடலான யுவராஜ் சிங்குடன் சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
"கடந்த சில போட்டிகளில் ரன் அடிக்க முடியாமல் மனம் சற்றுத் தடுமாறிய நிலையில் யுவராஜ் சாரிடம் பேசினேன். முதல் 20 பந்துகளை நிதானமாக எதிர்கொண்டால் ஸ்கோர் தானாக மாறும் என அவர் முக்கிய நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார்."
"அதன் பிறகு எனது பேட்டிங் வீடியோக்களைப் பார்த்துத் தவறுகளைத் திருத்திக்கொண்டது இன்று எனக்குப் பெரிதும் உதவியது" என வைபவ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.