Page Loader
பயிற்சி பெற வந்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை : கிரிக்கெட் பயிற்சியாளர் கைது
பயிற்சி பெற வந்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளர் கைது

பயிற்சி பெற வந்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை : கிரிக்கெட் பயிற்சியாளர் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Apr 07, 2023
05:42 pm

செய்தி முன்னோட்டம்

தன்னிடம் பயிற்சி பெற வந்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் பயிற்சியாளர் நரேந்திர ஷா (65 வயது) கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அவர், வியாழக்கிழமை (ஏப்ரல் 6) இரவு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கத்தில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய மகளிர் அணியின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவரும், மகளிர் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸை வழிநடத்திய ஸ்னே ராணாவின் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

கிரிக்கெட் பயிற்சியாளர் கைது