யுஎஸ் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவு நடப்பு சாம்பியன் இரண்டாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன்களும், சீட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர்களுமான பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேடரினா சினியாகோவா, அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
விம்பிள்டன் ஒற்றையர் சாம்பியன் மற்றும் ஆல் இங்கிலாந்து கிளப்பில் இரட்டையர் பட்டத்தை வென்ற பார்போரா ஸ்ட்ரைகோவா மற்றும் மார்கெட்டா வோண்ட்ரூசோவா ஜோடியிடம் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோற்றனர்.
இதில், ஸ்டிரைகோவா கர்ப்பமடைந்ததை அடுத்து சில காலம் ஓய்வில் இருந்து, குழந்தை பெற்ற பிறகு இந்த ஆண்டு தான் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்பி இருந்தார்.
மேலும், முன்னதாக, தைவானின் ஹ்சீஹ் சு-வெய்யுடன் இணைந்து இரண்டாவது விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பார்போரா கிரெஜ்சிகோவா, கேடரினா சினியாகோவா ஜோடி தோல்வி
Barbora Strycova / Marketa Vondrousova won their match vs Barbora Krejcikova / Katerina Siniakova at US Open, 6-2, 6-3
— TennisONE Scores (@T1App_Scores) September 1, 2023