Page Loader
யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை
யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 08, 2023
11:54 am

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக, அரையிறுதியில் பிரெஞ்சு ஜோடியான நிக்கோலஸ் மஹுத் மற்றும் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டை எதிர்கொண்ட போபண்ணா - எப்டன் ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் பிரிட்டனின் ஜோ சலிஸ்பரியை ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர். இதற்கிடையே, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் 43 வயதான போபண்ணா, ஓபன் டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை எட்டிய மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ட்விட்டர் அஞ்சல்

ரோஹன் போபண்ணா சாதனை