ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (டிடிஎப்ஐ) மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள், தென்கொரியாவின் பியோங்சாங்கில் நடைபெறவுள்ள 26வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும், சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஐந்து ஆடவர் மற்றும் ஐந்து மகளிர் அடங்கிய 10 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர். தேர்வுக் குழு இரு பிரிவிலும் இரண்டு ரிசர்வ் வீரர்களை பெயரிட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் இரண்டு நிகழ்வுகளுக்கும் இருப்பார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் செப்டம்பர் 3 முதல் 10 வரையிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரையிலும் நடைபெற உள்ளன. ஆடவர் அணிக்கு ஷரத் கமல் தலைமையேற்று வழிநடத்தும் நிலையில், மகளிர் குழுவை மனிகா பத்ரா வழிநடத்துவார்.
இந்திய டேபிள் டென்னிஸ் அணி வீரர்கள் பட்டியல்
ஆடவர் : ஏ.ஷரத் கமல், ஜி.சத்தியன், ஹர்மீத் தேசாய், மானவ் தக்கர் மற்றும் மனுஷ் ஷா. ரிசர்வ் வீரர்கள் : எஸ்எப்ஆர் சினேஹித், சனில் ஷெட்டி. மகளிர் : மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி மற்றும் தியா சித்தலே. ரிசர்வ் வீராங்கனைகள்: அர்ச்சனா காமத், ரீத் ரிஷ்யா. ஆடவர் இரட்டையர்: ஏ.ஷரத் கமல் & ஜி.சத்தியன், மானவ் தக்கர் & மனுஷ் ஷா. மகளிர் இரட்டையர் : சுதிர்தா முகர்ஜி & அய்ஹிகா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா & தியா சித்தலே. கலப்பு இரட்டையர் : மனிகா பத்ரா & ஜி.சத்தியன், ஸ்ரீஜா அகுலா & ஹர்மீத் தேசாய். பயிற்சியாளர்கள் : சுபாஜித் சாஹா, மம்தா பிரபு.