Page Loader
"எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்" : வேட்டி சட்டையுடன் சிஎஸ்கே கேப்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
வேட்டி சட்டையுடன் சிஎஸ்கே கேப்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

"எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்" : வேட்டி சட்டையுடன் சிஎஸ்கே கேப்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Apr 14, 2023
05:49 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள் தோனி, ஜடேஜா மற்றும் கெய்க்வாட் வேட்டி சட்டையில் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை அணி வெளியிட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறப்புப் பதிவைப் பகிர்ந்துள்ளது. கேப்டன் எம்எஸ் தோனியுடன் இணைந்து புதிய அவதாரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் கழுத்தில் மாலை அணிந்து இருப்பதை போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. மேலும் அதனுடன், "எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்