தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் சாய்னா நேவால், கிரண் ஜார்ஜ், அஷ்மிதா சாலிஹா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் உலகின் 9 ஆம் நிலை வீரரான சீனாவின் ஷி யூகியை வீழ்த்தி முன்னேறியுள்ளார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி சாய் பிரனீத் ஆகியோர் முதல் சுட்டெரிலியேயே வெளியேறிய நிலையில், ஒடிசாவை சேர்ந்த இளம் வீரர் கிரண் ஜார்ஜ், 2018 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷி யூ கியை 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வென்று அசத்தினார்.
இந்நிலையில், கிரண் ஜார்ஜ் அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை எதிர்கொள்கிறார்.
saina nehwal enters round 16
சாய்னா நேவால், அஷ்மிதா சாலிஹா வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினாலும், அஷ்மிதா சாலிஹா மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்.
அஷ்மிதா சக இந்திய வீராங்கனையான மாளவிகா பன்சோட்டை 17-21, 14-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அஷ்மிதா அடுத்ததாக ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நான்காம் நிலை வீராங்கனையான கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
மறுபுறம் சாய்னா நேவால் 21-13, 21-7 என்ற கணக்கில் கனடாவின் வென் யூ ஜாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சாய்னா யாரை எதிர்கொள்வார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.