
தாய்லாந்து ஓபன் 2023 : இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி!
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (ஜூன் 1) தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்து முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கிரண் ஜார்ஜ் 21-11, 21-19 என்ற நேர் செட் கணக்கில் மலேசிய மாஸ்டர்ஸ் ரன்னர்-அப்பான ஹாங் யாங்கை வீழ்த்தினார்.
இதற்கிடையே மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 18-21 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
லக்ஷயா சென், சாய்னா நேவால் மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தங்கள் பிரிவுகளில் வியாழக்கிழமை விளையாட உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
THERE’S NO STOPPING THIS GUY 😍
— BAI Media (@BAI_Media) June 1, 2023
Continuing his fine run Kiran defeated Weng Hong Yang 🇨🇳 21-11, 21-19 to enter his first-ever quarterfinal at a BWF World Tour Super 500 event 😎🔥
Keep it up champ! 💪
📸: @badmintonphoto #ThailandOpen2023 #IndiaontheRise#Badminton pic.twitter.com/wHUxqx5mdA