அமெரிக்க டெகாத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர்
அமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற ஜிம் கிளிக் ஷூட் அவுட் போட்டியில் காமன்வெல்த் பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர் டெகாத்லான் வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய சாதனையை முறியடித்தார். பர்மிங்காமில் 2022 காமன்வெல்த்தில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின், கடுமையான 10-போட்டிகளை கொண்ட டெகாத்லானில் போட்டியிட்டு, ஒட்டுமொத்தமாக 7,648 புள்ளிகளைப் பெற்றார். டெல்லியில் பிறந்த 24 வயதான தேஜஸ்வின், அமெரிக்காவின் கன்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார். மேலும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.