Loading...
கிளாஸ்கோ காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டி
வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டி

கிளாஸ்கோ காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2026
09:22 am

செய்தி முன்னோட்டம்

கிளாஸ்கோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர் ராஜா முத்துப்பாண்டி பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச அரங்கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் (Snatch) சுற்றில் 126 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 160 கிலோ என ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். இப்போட்டியில் மலேசியாவின் முகமது அஸ்னில் பின் பிடின் 299 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் மோரியா பாரு 282 கிலோவுடன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விடாமுயற்சி

காயத்திலிருந்து மீண்டெழுந்த விடாமுயற்சி

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, தனது பள்ளிப் பருவத்திலிருந்தே பளுதூக்குதலில் தீவிரக் கவனம் செலுத்தி வந்தார்.

2019-ஆம் ஆண்டிலேயே காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தாலும், எதிர்பாராத தசைநார் காயம் மற்றும் அதைத் தொடர்ந்த அறுவை சிகிச்சை காரணமாக அத்தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

எனினும், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் களமிறங்கிய அவர், 2021 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்துத் தனது மீள்வருகையை உறுதி செய்தார்.

ADVERTISEMENT

வெற்றிகள்

தேசிய அளவிலான தொடர் வெற்றிகள்

தேசிய அளவிலான போட்டிகளில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் அவர், கடந்த பிப்ரவரி 2026-இல் நடைபெற்ற சீனியர் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பெரும் சாதனை படைத்தார்.

அப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 302 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கம் வென்றது சர்வதேச அளவில் அவர் சாதிப்பதற்கான வலுவான அடித்தளமாக அமைந்தது.

நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பளுதூக்குதல் பிரிவில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

முன்னதாக மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT