Page Loader
டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இந்திய அணியின் வெற்றிக்கு ஜஸ்மித் பும்ராவின் அபார பந்து வீச்சே காரணம் pc: BCCI

டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

எழுதியவர் Venkatalakshmi V
Jun 10, 2024
08:54 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'குரூப் - ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்தியா நேரப்படி நேற்று இரவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்-ஐ தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஜோடி இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இந்தியா அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. இறுதியாக 19 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி

பும்ராவின் அபார பந்து வீச்சில் சுருண்டது பாகிஸ்தான்

120 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் அணியின் கேப்டன் பாபர் அஸம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர். இதில் பாபர் அஸம் 4வது ஓவரில் 13 ரன்களில் சூரியகுமாரிடம் அவுட் ஆனார். ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஏற்றினார். பின்னர் அவரும், 14வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார். தொடர் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், இலக்கை எட்டமுடியாமல், ஏழு விக்கெட்களுக்கு 113 ரன்களே எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு ஜஸ்மித் பும்ராவின் அபார பந்து வீச்சே காரணம். அவர் மொத்தம் 3 விக்கெட்களை எடுத்திருந்தார்.