
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 போட்டித்தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி ரோஹித் ஷர்மாவின் சிறப்பான பேட்டிங்கினாலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபார பந்துவீச்சினாலும், 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினர்.
கிட்டத்தட்ட பழிவாங்கல் ஆட்டமாக பார்க்கப்பட்ட நேற்றை ஆட்டத்தின் வெற்றியால், இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கடந்த 2023 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 168 ரன்கள் எடுத்தனர். நேற்று, இந்தியா 171ஐப் பதிவு செய்தது.
உலககோப்பையின் இறுதிப்போட்டி, வரும் ஜூலை-29, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நாளை இறுதிப்போட்டி
டி20 உலக கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
— Sun News (@sunnewstamil) June 28, 2024
இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது!#SunNews | #T20Worldcup | #INDVsRSA pic.twitter.com/yI4ZuBVFeo