Page Loader
ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூர்யகுமாரை தேர்வு செய்தது விஸ்டன்
ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூர்யகுமாரை தேர்வு செய்தது விஸ்டன்

ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூர்யகுமாரை தேர்வு செய்தது விஸ்டன்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 18, 2023
04:29 pm

செய்தி முன்னோட்டம்

திங்களன்று (ஏப்ரல் 17) வெளியிடப்பட்ட விஸ்டன் கிரிக்கெட் காலண்டரின் 2023 பதிப்பில் சூர்யகுமார் யாதவ் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார். மார்ச் 2021 இல், இங்கிலாந்துக்கு எதிராக 28 பந்துகளில் அரைசதம் அடித்து பிரபலமான சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். மொத்தத்தில், அவர் டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 1,675 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் விளையாடி 433 ரன்களும் எடுத்துள்ளார். எனினும் டி20 கிரிக்கெட்டில் 175.76 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார்.

Wisden leading cricketer of the year

விஸ்டன் விருது வென்ற இதர வீரர்கள்

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுவதோடு, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது மேட்ச்-வின்னிங் செயல்திறன் அபாரமாக இருந்தது. இதற்கு முன்பு 2019 மற்றும் 2020ல் பென் ஸ்டோக்ஸ் இந்த விருதை வென்றுள்ளார். ஸ்டோக்ஸ் தலைமையில், இங்கிலாந்து டெஸ்ட் அணி 12 போட்டிகளில் 10 இல் வென்று சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அபாரமான ஃபார்மில் உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாவது முறையாக உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.