"கோல்டன் டக் அவுட் ஆனா என்ன?" : சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தினேஷ் கார்த்திக்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோல்டன் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் யாராலும் ஈடு செய்ய முடியாத பேட்டர் என்றும், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான ஓவர்களில் பேட் செய்ய வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் கிரிக்பஸ்ஸிடம் கூறினார். இருப்பினும், அவரது கடைசி ஒன்பது இன்னிங்ஸ்களில், சூர்யகுமார் யாதவ் வெறும் 110 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது இடம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் குறித்து தினேஷ் காரத்தின் பேசியதன் முழு விபரம்
கிரிக்பஸ்ஸிடம் தினேஷ் கார்த்திக் கூறியது பின்வருமாறு :- அவர் டி20களில் கூட இதுபோல் அவுட்டாகி இருப்பார். அவர் இதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவில்லை. மேலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மாற்று வீரராகவே நம்பர் 4 இடத்தில் அவர் களமிறங்கினார். ஹர்திக் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதை விரும்புகிறார். இதனால் ஹர்திக்கை நான்காம் இடத்திற்கு மாற்றி, சூர்யகுமாரை ஆறாம் இடத்திற்கு அனுப்பலாம். குறைவான ஓவர்கள் இருக்கும்போது சூர்யகுமார் களமிறங்கினால் தான் அவரது அசுர ஆட்டத்தை பார்க்க முடியும். இவ்வாறு தினேஷ் கார்த்தி கூறினார்.