Page Loader
பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றார் டென்னிஸ் வீரர் சுமித் நகல்
உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 77 வது இடத்தை பிடித்தார் சுமித் நகல்

பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றார் டென்னிஸ் வீரர் சுமித் நகல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2024
12:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான சுமித் நகல், 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். முன்னதாக ஜெர்மனியில் நடைபெற்ற ATP சேலஞ்சர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 77 வது இடத்தை பிடித்தார். அந்த தரவரிசை அடிப்படையில் தற்போது சுமித் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். ஞாயிற்று கிழமை நிறைவு பெற்ற ATP சேலஞ்சேர் போட்டியின் இறுதி போட்டியில், சுமித் ஸ்விட்ஸ்ர்லாண்ட்-ஐ சேர்ந்த அலெக்சாண்டர் ரிட்ச்சர்ட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். சுமித்திற்கு இது 6 வது சேலஞ்சர் பட்டமாகும். கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டில் தான், சோம்தேவ் இந்தியாவிலிருந்து டென்னிஸ் போட்டியில் ஒலிம்பிக்சில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post