
உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு
செய்தி முன்னோட்டம்
13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.
அதன்படி இத்தொடரின் 14வது லீக் ஆட்டம் இன்று(அக்.,16) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடக்கிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்ட நிலையில், இலங்கை அணி டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்த 2 அணிகளுமே இந்த 13வது உலக கோப்பைக்கான போட்டியில் இதுவரை எந்தவொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.
இதனால் இப்போட்டியில் தங்கள் அணியின் வெற்றியினை உறுதி செய்ய கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகுந்த விறுவிறுப்பான சூழலில் இப்போட்டி தற்போது நடக்கவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஆஸ்திரேலியா vs இலங்கை
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி#WorldCup2023 #AUSvsSL #Australia #Srilanka #Cummins #Jayaplus pic.twitter.com/owQpFlnQJp
— Jaya Plus (@jayapluschannel) October 16, 2023