Page Loader
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

எழுதியவர் Sekar Chinnappan
Apr 18, 2023
07:24 pm

செய்தி முன்னோட்டம்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரின் சதங்களினால் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து அயர்லாந்து பேட்டிங்கை தொடங்கிய நிலையில், பிரபாத் ஜெயசூர்யா அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் எடுத்ததால், 143 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்சிலும் அயர்லாந்து 168 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியைத் தழுவியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

first century of samaravikrama

முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த சதீர சமரவிக்ரம

சமரவிக்ரம, தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ததோடு, எட்டாவது வீரராக களமிறங்கி சதமடித்த நான்காவது இலங்கை கிரிக்கெட் அணி வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக திலன் சமரவீர, கித்துருவன் விதானகே, மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இது தவிர கருணாரத்னே தனது 15வது டெஸ்ட் சதத்தையும், குசல் மெண்டிஸ் தனது 8வது டெஸ்ட் சதத்தையும், சண்டிமால் 14வது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார். ரமேஷ் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இலங்கைக்காக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வேகமாக எட்டியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.