NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    08:23 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியை சேர்ந்த போனியோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த லுகா நார்டி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியா வீரர் பெர்னார்ட் டாமிக்கை வீழ்த்தினார்.

    மறுபுறம், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி இணை, 7-6 (3), 6-4 என்ற நேர் செட்டில் ராய் ஹோ- மாதுஸ்சிவ்ஸ்கி ஜோடியை வென்றது

    டி.என்.பி.எல்

    டி.என்.பி.எல். வீரர்கள் ஏலம்: 8 அணிகள் பங்கேற்பு

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர், வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில், சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த அணிகளுக்கான வீரர்களின் ஏலம் நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சேலம், திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறும்.

    இறுதிப்போட்டி சென்னையில் நடக்கும்.

    கிரிக்கெட்

    ஜூனியர் உலகக்கோப்பை 2வது அரையிறுதி போட்டி

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் அணி, வரும் பிப்ரவரி 11ஆம் தேதி பெனோனியில் நடைபெறும் இறுதி போட்டியில், இந்தியா அணியுடன் மோதும்.

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இப்போட்டி தொடரில், சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முறையே குரூப்-1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தது.

    முன்னதாக கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டெஸ்ட் தொடர்

    இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்: அடுத்த 2 போட்டிகளிலிருந்தும் கோலி விலகுகிறாரா? 

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை.

    இந்த நிலையில், முதல் டெஸ்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    அடுத்த போட்டியில், 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துள்ளது.

    இந்த சூழலில், அடுத்துள்ள இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி பங்கேற்கமாட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

    விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கர்ப்பமாக இருப்பதுவே கோலி போட்டி தொடரை மிஸ் செய்வதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    டென்னிஸ்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  பேட்மிண்டன் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் செய்திகள்

    விளையாட்டு வீரர்கள்

    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் இங்கிலாந்து
    சுதந்திர தின ஸ்பெஷல் : 76 ஆண்டுகால வரலாற்றில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனைகள் இந்தியா
    மாற்றுத் திறனாளிகள் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல பயிற்சி : பிரதமர் மோடி மாற்றுத்திறனாளி
    'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் இந்தியா

    டென்னிஸ்

    யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி யுஎஸ் ஓபன்
    19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப் அமெரிக்கா
    அமெரிக்க ஒபன் டென்னிஸ்: நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச்  நோவக் ஜோகோவிச்
    Sports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் இந்தியா

    கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா மகளிர் கிரிக்கெட்
    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025