ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய ஆடவர், மகளிர் அணியினர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்ததுள்ளது.
முன்னதாக நாக் அவுட் சுற்றில் கஜகஸ்தானுடன் மோதிய இந்திய ஆடவர் அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணி, 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
மறுபுறம், மகளிர் அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சீன தைபே அணியை எதிர்கொண்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தது
மகளிர் ஐபிஎல்
மகளிர் பிரிமியர் லீக்: தொடக்க விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்
மகளிர் ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.
இந்த போட்டி தொடரின் பிரமாண்ட தொடக்க விழாவில், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், ஷாகித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், கார்த்திக் ஆர்யன், டைகர் ஷெராஃப் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, கடத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள், மும்பையில் மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்தாண்டுக்கான போட்டிகள், மும்பை, டெல்லி மற்றும் பெங்களுருவில் நடைபெறும்.
மொத்தம் 22 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.
ஐசிசி
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ஜெய்ஸ்வால் முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவரின் அதிரடி ஆட்டம் காரணமாக, தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி தற்போது 15-வது இடத்தை பிடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 876 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
கிரிக்கெட்
நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டி
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு, 215 ரன்கள் குவித்தது.
நியூஸிலாந்து அணி வீரர்களான ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், டேவன் கான்வே 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் எடுத்து அணிக்கு பலத்தை கூட்டினர்.
எனினும், ஆஸ்திரேலியா அணியின் அபாரமான பந்துவீச்சில், 215 ரன்களே எடுக்க முடிந்தது