NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 23, 2023
    08:50 am

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.

    முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் டாரில் மிட்செல் 130 ரன்களும் ராச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவின் விராட் கோலி அபாரமாக விளையாடி 95 ரன்கள் குவித்ததன் மூலம், 48 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    India equals New Zealand record in CWC

    ஒருநாள் உலகக்கோப்பையில் சேஸ் செய்து வெற்றி பெறுவதில் நியூசிலாந்தின் சாதனையை சமன் செய்த இந்தியா

    ஞாயிற்றுக்கிழமை தரம்ஷாலாவில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

    மேலும், இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் 2015ஆம் ஆண்டு நியூசிலாந்து செய்த சாதனையை சமன் செய்தது.

    இந்தியா தனது 2023 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்ற நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிராகவும் வெற்றி பெற்றது.

    இவை அனைத்துமே இலக்கை சேஸ் செய்து பெற்ற வெற்றிகள் ஆகும். இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக அதிகமுறை சேஸ் செய்து வெற்றி பெற்ற நியூசிலாந்தின் சாதனையை சமன் செய்தது.

    Gael monfils reclaims Stockholm Open Championship after 12 years

    12 வருடங்களுக்கு மீண்டும் ஸ்டாக்ஹோம் ஓபன் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர்

    ஞாயிற்றுக்கிழமை ஸ்வீடனில் நடந்த ஏடிபி 250 டென்னிஸ் போட்டியான ஸ்டாக்ஹோம் ஓபனை கேல் மான்ஃபில்ஸ் வென்றார்.

    ரஷ்ய வீரர் பாவெல் கோடோவை எதிர்கொண்ட பிரெஞ்சு வீரர் கேல் மான்ஃபில்ஸ் இரண்டு மணி 37 நிமிடங்களில் 4-6, 7-6(6), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

    கேல் மான்ஃபில்ஸ் கடைசியாக ஸ்டாக்ஹோம் ஓபனை 2011இல் வென்றிருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வென்றுள்ளார்.

    இந்த இடைவெளி எந்தவொரு டென்னிஸ் வீரருக்கும் ஏடிபி டூர் வரலாற்றில் மிகப்பெரியதாகும். மேலும், ஸ்டாக்ஹோம் பட்டத்தை வென்ற வயதான வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

    Rohit sharma brokes AB De villiers in terms of most sixes in cwc

    ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள்; ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

    ஞாயிற்றுக்கிழமை தரம்சாலாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, தென்னாப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.

    இந்த போட்டிக்கு முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தில் இருந்த ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் 4 சிக்சர்கள் அடித்தார்.

    இதன் மூலம் 22 போட்டிகளில் 40 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முன்னர் ஏபி டி வில்லியர்ஸ் 37 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரோஹித் ஷர்மா அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    இந்த பட்டியலில் 49 சிக்சர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ள நிலையில், நடப்பு தொடரிலேயே ரோஹித் ஷர்மா அதையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Reece Topley ruled out of ODI World Cup 2023

    ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவு; ரீஸ் டாப்லி விலகல்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி, இடது ஆட்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவர், ஒருநாள் உலகக்கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய கடைசி போட்டியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து சிகிச்சைக்காக வெளியே சென்றாலும் சிறிது நேரத்திலேயே மைதானத்திற்கு மீண்டும் வந்தார்.

    போட்டியில் தொடர்ந்து அவர் பந்துவீசினாலும், இங்கிலாந்து அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. இந்நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    29 வயதான அவர், உலகக்கோப்பையில் மூன்று ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் உலகக்கோப்பை, SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து! கிரிக்கெட்
    Sports Round Up: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து; ஒலிம்பிக்ஸை நடத்த தயாராகும் குஜராத்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்! கிரிக்கெட்
    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்? கிரிக்கெட்
    ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணி

    INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAFG : டெல்லி அருண் ஜெட்லீ மைதானம் இந்தியாவுக்கு சாதகமா? கடந்த கால புள்ளி விபரங்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று ஹர்திக் பாண்டியா
    அகமதாபாத் செல்லும் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? ஷுப்மன் கில்

    கிரிக்கெட்

    ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் அணி
    உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி  ஆப்கான் கிரிக்கெட் அணி
    Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து கவுதம் காம்பிர்

    கிரிக்கெட் செய்திகள்

    ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    "இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து கிரிக்கெட்
    இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி  இந்தியா vs பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025