
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பி.வி.சிந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) மாட்ரிட்டில் நடந்த ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பிடபிள்யுஎப் சூப்பர் 300 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கிடம் தோல்வியடைந்தார்.
இதற்கு முன்னதாக சிந்து துன்ஜங்கை எதிர்கொண்ட 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 7-0 என முன்னிலை வகித்து இறுதிப் போட்டியை எதிர்கொண்டார்.
ஆனால் வெறும் 29 நிமிடங்கள் மட்டுமே நடந்த இறுதிப் போட்டியில் 21-8, 21-8 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங் எளிதாக வீழ்த்தி பட்டத்தை வென்றார். துன்ஜங் இதற்கு முன்பு ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கரோலினா மரினையும் தோற்கடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய பேட்மிண்டன் சங்கள் ட்வீட்
Super Sindhu 🔥🙌
— BAI Media (@BAI_Media) April 2, 2023
📸: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #SpainMasters2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/hiexrkNc0F