'பாபரை ஆதரிப்பது எனது கடமை': பாகிஸ்தான் கேப்டன் பதவியை இழந்த பின் ஷாஹீன் அப்ரிடி
2024 டி20 உலகக்கோப்பை இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டி20ஐ தொடரை தலைமை தாங்கிய ஷாஹீன், அந்த அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்திக்குறிப்பு மூலம் ஷாஹீன் தனது மௌனத்தை கலைத்து, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கேப்டனாக மீண்டும் பதவியேற்ற பாபர் ஆசாமை ஆதரிப்பது தனது கடமை என்று தெரிவித்துள்ளார். அவரும் பாபரும் ஒரே இலக்கை நோக்கி செயல்படுவதாகவும், இது பாகிஸ்தானை உலகின் சிறந்த அணியாக மாற்றுவதாகவும் ஷஹீன் அந்த அறிக்கையில் கூறினார்.
பாபர் ரீ-என்ட்ரி
மேலும், ஷாஹீன் தனது குறுகிய கால கேப்டன்சி, தனக்கு கிடைத்த கவுரவம் என்றும், மீண்டும் அவரது(பாபரின்) கேப்டன்சியின் கீழ் விளையாட ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். சுவாரசியமாக, இந்தியாவில் நடைபெற்ற ODI உலகக் கோப்பை 2023 இல் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, பிசிபி அனைத்து வடிவங்களிலும் பாபரை நீக்கிய பின்னர், ஷாஹீன் பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். "பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தது ஒரு முழுமையான மரியாதை. நான் எப்போதும் நினைவுகளையும் வாய்ப்பையும் போற்றுவேன். ஒரு அணி வீரராக, எங்கள் கேப்டன் பாபர் ஆசாமை ஆதரிப்பது எனது கடமை" "அவர் மீது மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை. களத்திலும், வெளியிலும் அவருக்கு உதவ முயற்சிப்பேன்" என்று ஷாஹீன் கூறினார்.