மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு : 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம்
செய்தி முன்னோட்டம்
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஜோசியா ஜக்ர்ஸெவ்ஸ்கி அல்ட்ரா மாரத்தானில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நிலையில், அவர் ஓட்டப் பாதையின் ஒரு பகுதிக்கு வாகனத்தைப் பயன்படுத்தியதாக தரவு காட்டியதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 7 ஆம் தேதி ஜிபி அல்ட்ராஸ் மான்செஸ்டர் முதல் லிவர்பூல் வரையிலான 80 கிமீ தூரத்திற்கு அல்ட்ரா மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.
இதில் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்காட்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜோசியா ஜக்ர்ஸெவ்ஸ்கி, பந்தயத்தின் 4 கிமீ நீளத்திற்கு காரைப் பயன்படுத்தியதாக பந்தய கண்காணிப்பு அமைப்பின் தரவுகள் தெரிவித்தது.
player apologies for fraud
மோசடி குறித்து பந்தய இயக்குனர் வெய்ன் டிரிங்க்வாட்டர் கருத்து
பந்தய இயக்குனர் வெய்ன் டிரிங்க்வாட்டர், "நிகழ்வின் ஒரு பகுதியின் போது ஒரு ஓட்டப்பந்தய வீரர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.
எங்கள் ரேஸ் டிராக்கிங் சிஸ்டம், ஜிபிஎஸ் தரவு, எங்கள் நிகழ்வுக் குழு, மற்ற போட்டியாளர்கள் மற்றும் பங்கேற்பாளரிடமிருந்து வழங்கப்பட்ட அறிக்கைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர், ஒரு ஓட்டப்பந்தய வீரர் வாகனத்தை பயன்படுத்தியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜக்ர்ஸெவ்ஸ்கி பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.
எனினும் அவர் தனது தவறுக்கு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கூறியதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிகிறது.