
2024இல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக சவூதி அரேபியா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சவூதி அரேபியா 2024 இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக திங்களன்று (அக்டோபர் 23) அறிவித்துள்ளது. சவூதி அரேபியா இளவரசர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையானது, கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸின் முதன்மையான உலகளாவிய மையமாக மாறுவதற்கான சவுதி அரேபியாவின் பயணத்தின் இயல்பான அடுத்த படியாகும்." எனத் தெரிவித்துள்ளார்.
கால் ஆஃப் டூட்டி விளையாட்டில் இளவரசர் முகமது பின் சல்மான் அதிக ஆர்வம் உடையவர் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, முகமது பின் சல்மான் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதில் இருந்து இ-ஸ்போர்ட்ஸ் துறையில் அதிக முதலீடு செய்துள்ளது.
Saudi Arabia to host ESports World Cup
உள்ளூர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் இ-ஸ்போர்ட்ஸ்
இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதன் மூலம் சவூதி அரேபியாவில் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான உள்ளூர் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு இளவரசர் முகமது பின் சல்மான் அரசுக்கு சொந்தமான சாவி கேம்ஸ் குழுமத்திற்கு 38 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்தார்.
இதன் மூலம், 2030க்குள் 39,000 இ-ஸ்போர்ட்ஸ் தொடர்பான வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையின் முதல் சீசனை அடுத்த வரும் கோடைகாலத்தில் நடத்த சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
8 வாரங்கள் நடைபெறும் இந்த போட்டிக்கு 45 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.