Page Loader
TNPL 2023 : முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன்
டிஎன்பிஎல் 2023 முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன்

TNPL 2023 : முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 13, 2023
11:23 am

செய்தி முன்னோட்டம்

டிஎன்பிஎல் 2023 தொடர் திங்கட்கிழமை (ஜூன் 12) தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். கோவை எஸ்என்ஆர் கல்லூரி வளாக மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் சாய் சுதர்சன் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் மட்டும் தனியாக 86 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த திருப்பூர் தமிழாஸ் 20 ஓவர்கள் முடிவில் 109 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

Sai Sudharsan excellence continues

சாய் சுதர்சனின் அபார செயல்திறன்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் இடம் பெற்றிருந்தார். இந்த தொடரில் அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக செயல்பட்ட சாய் சுதர்சன், ஐபிஎல் 2023 சீசனில் வெறும் 8 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 141.4 ஸ்ட்ரைக் ரேட்களுடன் 362 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் எடுத்த 96 ரன்கள் அவரது மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதே செயல்திறனை தற்போது லைக்கா கோவை கிங்ஸ் அணியிலும் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.