தேசிய குழந்தைகள் தினத்தில் ருசீகர மலரும் நினைவுகளை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குழந்தைப்பருவ நாட்களை நினைவுகூர்ந்து உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவரும் அவரது நண்பர்களும் சாகித்ய சஹ்வாஸில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் டயர்களை பஞ்சர் ஆக்கி ரசித்த ருசீகர சம்பவங்களையும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ""நான் சிறுவனாக இருந்தபோது, நானும் எனது நண்பர்களும் சாகித்ய சஹ்வாஸில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் டயர்களை பஞ்சர் ஆக்குவோம். 4 டயர்களையும் தட்டையாக்கும் வரை எங்கள் வேலை முடியாது. சிறிது குறும்புகள் இல்லாமல் குழந்தைப் பருவம் முழுமையடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.