ஒலிம்பிக் டென்னிஸில் தங்கம் வென்ற வயதான வீரர்; நோவக் ஜோகோவிச்சிற்கு சச்சின் பாராட்டு
பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பரபரப்பான ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தங்கம் வென்றார். 37 வயதில் அவர் தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்றதோடு, ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற அதிக வயதான வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். முன்னதாக, ஜோகோவிச் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், இந்த வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், நோவக் போட்டி முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தனதாக்கியுள்ளார் என பாராட்டியுள்ளார். அதோடு, அல்கராஸ் அனைத்து விதமான மைதானங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.