டிஆர்எஸ் வேண்டாம் என முடிவெடுத்த விராட் கோலி; ஆச்சரியமடைந்த ரோஹித் ஷர்மா
விராட் கோலி அவுட் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, டிஆர்எஸ் பயன்படுத்த வேண்டாம் எனத் தேர்ந்தெடுத்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆச்சரியம் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங்கில் 20வது ஓவரில், மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் நடுவர் ராட் டக்கர் எல்பிடபிள்யூ முடிவு எடுத்தார். இந்தியாவுக்கு மூன்று டிஆர்எஸ் தேர்வுகளும் மீதமிருந்த போதிலும், கோலி ரிவியூ எடுப்பதற்கு எதிராக முடிவு செய்தார். விராட் கோலியின் ஆட்டமிழப்பைச் சுற்றியுள்ள குழப்பம் அதிகரித்த நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவின் ரியாக்ஷன்கள் புகைப்படங்களாக வைரலாகி வருகின்றன.