ரோஹித் ஷர்மாவுக்கு இனி அணியில் இடமில்லை? பரபரப்புத் தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் களமிறங்க உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் களமிறங்க உள்ளது. டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் மறுபிரவேசம் மீது அனைவரது பார்வையும் குவிந்துள்ளது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு அறிக்கையின்படி, ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்பே டி20 கிரிக்கெட்டில் தன்னை பரிசீலிக்காமல் இருப்பது சரியான முடிவு தான் என்று ரோஹித் ஷர்மா தேர்வாளர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் நிகழப்போகும் மாற்றங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. அவர் கடைசியாக 2022இல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் விளையாடினார். அதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி திட்டமிடப்பட்டிருந்தாலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த கேள்விக்குறிகளை இது எழுப்புகிறது. ரோஹித்துடன் அவரது ஒயிட்பால் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வாளர்கள் விவாதிப்பார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகக்கோப்பையில் வங்கதேச மோதலின் போது கணுக்காலில் காயம் அடைந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவடையும் ஜனவரி வரை அணிக்குத் திரும்பமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.