உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. முன்னதாக இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போட்டியில் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா 84 பந்துகளில் 131 ரன்களை எடுத்திருந்தார். இதனால் இந்தியா எளிதாக தனது இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. வெகுநாட்களுக்கு பிறகு ரோஹித் ஷர்மா இப்போட்டியில் சதம் அடித்ததை தொடர்ந்து, உலகளவில் அதிகளவு சர்வதேச சிக்ஸர்களை அடித்து, விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்னும் பெருமையினை அவர் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் சாதனையினை முறையடித்த இந்திய கிரிக்கெட் வீரர்
இதன்படி அவர் ஒரு உலக கோப்பை தொடரில் 24 சிக்ஸர்களை அடித்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் கடந்த 2015ம் ஆண்டு 21 சிக்ஸர்கள் அடித்த சாதனையையும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மோர்கன் கடந்த 2019ம் ஆண்டு 22 சிக்ஸர்களை அடித்து பெற்ற சாதனையையும் முறியடித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் 5 சிக்ஸர்களை அடித்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சாதனையினையும் முறியடித்துள்ளார். கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 554 சிக்ஸர்களை அடித்து முதல் இடத்தினை பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய தகவலாகும்.