Page Loader
'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்
ரோஹித் பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்

'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2023
02:01 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டிக்கு அடுத்த நாள், அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது. அவர் தனது பாஸ்போர்ட்டை கொழும்பில் உள்ள ஹோட்டலில் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள உறுப்பினர்கள் இந்தியா திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு புறப்படும் பேருந்துக்காக காத்திருந்தனர். இறுதியாக, இந்திய அணியின் துணை ஊழியர்கள் ரோஹித்தின் பாஸ்போர்ட்டை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த சம்பவம் வெளியான நிலையில், 2017இல் விராட் கோலி ரோஹித் ஷர்மாவின் மறதி குறித்து கூறிய காணொளி வைரலாகி வருகிறது. அதில், ரோஹித் இப்படித்தான் பலமுறை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

embed

ரோஹித் ஷர்மாவின் மறதி குறித்து விராட் கோலி பேசிய காணொளி

Virat Kohli was right when he said Rohit Sharma forgets almost every thing 🤣 Yesterday Rohit once again forgot his passport.pic.twitter.com/8Hyxk6Az4W— Ansh Shah (@asmemesss) September 18, 2023