ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். முன்னதாக கேன் வில்லியம்சன் 2019இல் 578 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், ரோஹித் ஷர்மா தற்போது 597 ரன்களை குவித்துள்ளார். அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 29வது ரன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கிடையே, அபாரமாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த கேப்டன்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, முதலிடத்தில் இருந்த கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி ரோஹித் ஷர்மா முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளனர். இந்த இருவரையும் தொடர்ந்து, இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே (2007 இல் 548 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (2007 இல் 539 ரன்கள்) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் (2019 இல் 507 ரன்கள்) ஆகியோர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் 500க்கும் அதிகமான ரன்களைக் குவித்த மற்ற கேப்டன்கள் ஆவர். இதற்கிடையே, ஒரு உலகக்கோப்பை தொடரில் குறைந்தபட்சம் 400+ ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார்.