Page Loader
ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா
ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா

ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 6,000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா செய்துள்ளார். ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 25வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக நடப்பு சீசனில், ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

players who surpassed 6000 runs in ipl

ஐபிஎல்லில் 6,000 ரன்களை கடந்த வீரர்கள்

ஐபிஎல்லில் விராட் கோலி 6,844 ரன்களுடன், 6,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 6,477 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், டேவிட் வார்னர் 6,109 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ரோஹித் தற்போது ஐபிஎல்லில் 232 ஆட்டங்களில் 30.22 சராசரியில் 6,014 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 130.03 ஆகும். இதற்கிடையே பந்துகளின் அடிப்படையில் இந்தியர்களில் 6,000 ஐபிஎல் ரன்களை மிக வேகமாக கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார். அவர் 4,616 பந்துகளில் இந்த ரன்களை எடுத்துள்ளார். அதே நேரத்தில் கோலி 4,595 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.