
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான அரைசதத்துடன் இரண்டு சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா; என்னென்னன்னு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 45 பந்துகளில் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து, 15.3 ஓவர்களிலேயே 177 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் எட்ட உதவினர்.
இந்த வெற்றி மும்பை அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது, புள்ளிகள் பட்டியலில் அவர்களை ஆறாவது இடத்திற்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், ரோஹித் ஷர்மா, இந்த இன்னிங்ஸின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதிக ரன்கள்
ஐபிஎல்லில் அதிக ரன்கள்
37 வயதான ரோஹித் ஷர்மா, தற்போது 6,786 ரன்களுடன், ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் விராட் கோலிக்கு (8,326 ரன்கள்) அடுத்து உள்ளார்.
தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஷிகர் தவான் 6,769 ரன்களுடன் உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 6,565 ரன்களுடன் டேவிட் வார்னர் நான்காவது இடத்திலும், 5.528 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கிடையே, ரோஹித் ஷர்மா மற்றொரு சாதனையாக ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களில் 9 ஸ்கோர்களுடன் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.