Page Loader
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அடுத்தடுத்து இறுதிப் போட்டியை அடைந்த ஜோடி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 25, 2024
12:07 pm

செய்தி முன்னோட்டம்

ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி, ZZ ஜாங் மற்றும் டோமாஸ் மச்சாக் ஜோடியை தோற்கடித்ததன் மூலம், தங்களின் முதல் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நம்பர் 1 ஆடவர் இரட்டையர் ஜோடியாக தரவரிசையில் முன்னேறிய ரோஹன் போபண்ணா மற்றும் எப்டன் ஜோடி, ஜாங் மற்றும் மச்சாக் ஆகியோருடன் நடைபெற்ற கடுமையான ஆட்டத்தை முறியடித்து, 2024 ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், இருவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அடுத்தடுத்து இறுதிப் போட்டியை அடைந்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. முன்னதாக இருவருமே 2023 யுஎஸ் ஓபனின் இறுதிப் போட்டியை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா