ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அபாரம்! லா லிகா கோப்பையை கைப்பற்றியது பார்சிலோனா!
செய்தி முன்னோட்டம்
லா லிகா கால்பந்து தொடரில் எஸ்பான்யோலை 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்று தனது 27வது லா லிகா பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
மேலும் 2019 க்கு பிறகு முதல்முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே பார்சிலோனா வீரர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி தொடர்ந்து எட்டு லா லிகா சீசன்களில் 20க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
2015-16இல் பன்டெஸ்லிகாவில் 30 கோல்களை அடித்ததில் தொடங்கி 2016-17ல் 30, 2017-18ல் 29, 2018-19ல் 22, 2019-20ல் 34, 2020-21ல் 41, 2021-22ல் 35 என கோல்கள் அடித்துள்ளார்.
நடப்பு லா லிகா சீசனில் அவர் 21 கோல்கள் அடித்துள்ளார்.
மேலும் ஐரோப்பாவின் டாப் ஐந்து லீக்குகளில் அவர் விளையாடியுள்ள 13 சீசன்களில் 11ல் கோல் அடித்துள்ளார்.
Robert Lewandowski breaks record
அதிவேகமாக 20 லா லிகா கோல்கள் அடித்த மூன்றாவது வீரர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி
லெவன்டோவ்ஸ்கி லா லிகாவில் இந்த சீசனில் பார்சிலோனாவுக்காக 21 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 21ஆம் நூற்றாண்டில் 20 லா லிகா கோல்களை அதிவேகமாக அடித்த மூன்றாவது வீரராக இருக்கும் ஜூலியோ பாப்டிஸ்டாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இருவரும் 30 ஆட்டங்களில் 20 கோல்களை எட்டியுள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ (24 ஆட்டங்கள்) மற்றும் ராடமெல் பால்காவோ (26 ஆட்டங்கள்) மட்டுமே இவர்களை விட முன்னிலையில் உள்ளனர்.
லெவன்டோவ்ஸ்கி முன்னதாக 2019-20 இல் சாம்பியன்ஸ் லீக்கை வென்றார். அவர் கிளப் உலக கோப்பை மற்றும் யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையுடன் ஆறு ஜெர்மன் சூப்பர் கோப்பை பட்டங்களையும் வென்றுள்ள நிலையில், தற்போது லா லிகா கோப்பையையும் கைப்பற்றியுள்ளார்.