
இங்கிலாந்தில் ஒரு சீரீஸில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்து ரிஷப் பண்ட் சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் ஒரே சுற்றுப்பயணத்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது, நியூசிலாந்தின் டாம் ப்ளண்டலின் 2022 ஆம் ஆண்டு சாதனையான 383 ரன்களை பன்ட் முறியடித்தார். அவர் தற்போது முதல் இன்னிங்ஸில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 415 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக, போட்டியின் முதல் நாளில் விக்கெட் கீப்பிங் செய்யும் போது விரலில் ஏற்பட்ட காயத்தால் துருவ் ஜூரலிடம் விக்கெட் கீப்பிங்கை கொடுத்த நிலையிலும், பேட்டிங் செய்யும் போது பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாதனைகள்
ரிஷப் பண்ட் சாதனைகள்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மேலும் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 34 சிக்சர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் முன்னர் முதலிடத்தில் இருந்த நிலையில், 35வது சிக்சரை அடித்து அதை முறியடித்துள்ளார். இங்கிலாந்தில் கே.எல்.ராகுலுடன் பார்னட்ஷிப்பில் அதிக முறை 100+ ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இந்த ஜோடி இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 3 முறை 100+ ரன்களை எடுத்துள்ளது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இந்திய விக்கெட் கீப்பராக அதிக 50+ ரன்களை எடுத்த எம்எஸ் தோனியின் சாதனையை இதன் மூலம் சமன் செய்துள்ளார்.