NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை நிறைவு செய்தார் ரிஷப் பண்ட்

    INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.

    2022 வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு விபத்தில் சிக்கி நீண்ட காலம் ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டுதான் விளையாட்டுக்கு திரும்பினார்.

    டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே விளையாடியுள்ள ரிஷப் பண்ட், காயத்திற்கு பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

    இந்நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) சதமடித்துள்ளது மிகச் சிறந்த கம்பேக்காக மாறியுள்ளது.

    இந்த சதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆறு சதம் நடித்துள்ள எம்எஸ் டோனியின் ரெக்கார்டை சமன் செய்துள்ளார்.

    போட்டி நிலவரம்

    இந்தியா vs வங்கதேசம் முதல் போட்டி தற்போதைய நிலவரம்

    ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.

    முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் சதம் மற்றும் ஜடேஜா, ஜெய்ஸ்வாலின் அரைசதங்கள் மூலம் 376 ரன்கள் குவித்தது.

    அதே நேரம் வங்கதேசம் பும்ராவின் (4 விக்கெட்டுகள்) அபார பந்துவீசசு மூலம் 149 ரன்களுக்கு சுருண்டது.

    இதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் போட்டியின் இரண்டாவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, தற்போது மூன்றாவது நாளின் இரண்டாம் அமர்வில் 450 ரன்களுக்கும் மேல் முன்னிலையுடன் வலுவாக உள்ளது.

    ரிஷப் பண்ட் சதமடித்துள்ள நிலையில், மறுமுனையில் ஷுப்மன் கில்லும் சதத்தை நெருங்கியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிஷப் பண்ட்
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ரிஷப் பண்ட்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் இந்தியா vs பாகிஸ்தான்
    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
    துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார் துலீப் டிராபி
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    India vs England: இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அஸ்வின் அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு

    கிரிக்கெட் செய்திகள்

    தி அல்டிமேட் ஜாட்; ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் ரோஹித் ஷர்மா
    கிரிக்கெட் மட்டுமில்ல..பேட்மிண்டன்-லையும் நான் கில்லி டா: தோனியின் வைரல் வீடியோ எம்எஸ் தோனி
    ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல் ஜெய் ஷா
    இந்தியாவை பின்னுக்குத் தள்ளி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்பெயின் ஸ்பெயின்

    கிரிக்கெட்

    விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்; அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதி கே.எல்.ராகுல்
    ஒன்றல்ல, இரண்டல்ல.. ஒரே டி20 போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்றில் முதல் முறை டி20 கிரிக்கெட்
    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல் ஐபிஎல்
    26 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர்; பின்னணி என்ன? ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025