சமாஜ்வாதி எம்பியுடன் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் நிச்சயதார்த்தம் முடிந்ததா? உண்மை இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரின்கு சிங் சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வைரலாகிய நிலையில், அதுகுறித்த உண்மைத் தன்னை தற்போது தெரிய வந்துள்ளது.
பிரியாவின் தந்தையும் தற்போதைய உத்தரபிரதேச எம்எல்ஏவுமான துஃபானி சரோஜ், குடும்பங்களுக்கு இடையே இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், நிச்சயதார்த்தம் இன்னும் நடக்கவில்லை என்று கூறியதாக இந்தியா டிவி டிஜிட்டல் தகவல் வெளியிட்டுள்ளது.
பணி நிமித்தமாக தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள பிரியா சரோஜ், 25 வயதில் எம்பியாகி இளவயது எம்பிக்களில் ஒருவராக நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ளார்.
பின்னணி
ரின்கு சிங் - பிரியா சரோஜ் பின்னணி
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபிரியா பிரியா சரோஜ், நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டமம் பெற்றுள்ளார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வரும் பிரியா சரோஜ், அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். மறுபுறம் ரின்கு சிங், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் யாஷ் தயாளுக்கு எதிராக தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் அடித்த பிறகு புகழ் பெற்றார்.
அப்போதிருந்து, வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமாக தனது நற்பெயரை நிலைநிறுத்திக் கொண்ட அவர், டி20 போட்டிகளில் 165.14 ஸ்ட்ரைக் ரேட்டில் 507 ரன்கள் எடுத்துள்ளார்.
சமீபத்தில் கேகேஆர் அணியால் ₹13 கோடிக்கு தக்கவைத்துக் கொள்ளப்பட்ட ரிங்கு, உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.