ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்
ஐசிசி இந்த வாரம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டிக்கு பிறகு வெளியான ஐசிசியின் புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இடங்கள் பின்தங்கி ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் அவரது மோசமான செயல்திறன் இதற்கு காரணமாக அமைந்தது. இதற்கிடையே, இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 7 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரவரிசை இடமான 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்களின் ஆதிக்கம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கைப் பொறுத்தவரை டாப் 10 இடைநாளில் மூன்று இந்தியர்கள் உள்ளனர். ஆறாவது இடத்தில் ரோஹித் ஷர்மா தொடரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடத்திலும், விராட் கோலி இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சுத் தரவரிசையைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் தொடர்கிறார். அதேநேரத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்றாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்திலும் உள்ளனர். இதற்கிடையே, ஆல்ரவுண்டர் தரவரிசையில், ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார்.மேலும், மற்றொரு இந்திய வீரரான அக்சர் படேல் ஆறாவது இடத்தில் உள்ளார்.