Page Loader
ஒருநாள் உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி
ஒருநாள் உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2023
01:52 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 20) அன்று தில் ஜாஷ்ன் போலே என்ற அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட்டின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான ப்ரீத்தம் உருவாக்கிய இந்த பாடலில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவரே இந்த பாடலை புதன்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த கீதம் ரசிகர்களை ஒருநாள் எக்ஸ்பிரஸ் மூலம் இந்தியா முழுவதும் ஒரு காவியப் பயணத்திற்கு அழைத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இசை தளங்களிலும் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பிக் எஃப்எம் மற்றும் ரெட் எஃப்எம் ஆகியவற்றிலும் ரசிகர்கள் இதை கேட்டு மகிழலாம்.

embed

Twitter Post

DIL JASHN BOLE! #CWC23 Official Anthem arriving now on platform 2023 📢📢 Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! 🚂🥳 Credits: Music - Pritam Lyrics - Shloke Lal, Saaveri Verma Singers - Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita... pic.twitter.com/09AK5B8STG— ICC (@ICC) September 20, 2023