92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: ராஜஸ்தானுடன் மோதும் தமிழ்நாடு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதன்மையான முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 92-வது சீசன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நடப்பு சீசனில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகவும், எஞ்சிய அணிகள் பிளேட் பிரிவிலும் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் 4 நாள் போட்டிகளாக நடத்தப்பட உள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு பிரிவுகளில் தலா முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்
ரஞ்சி கோப்பை
ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும் தமிழ்நாடு
மும்பை, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட அணிகளுடன் பலம் வாய்ந்த டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி இன்று தொடங்கியது. அதேபோல் நாக்பூரில் தொடங்கும் 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் புதுச்சேரி மற்றும் விதர்பா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ஜம்மு & காஷ்மீர் அணி 'ஏ' பிரிவில் புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
பிரிவுகள் விவரம்
களமிறங்கும் இந்திய டெஸ்ட் நட்சத்திரங்கள்
ஏ பிரிவு: பரோடா, பீகார், கோவா, ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், புதுச்சேரி, உத்தரப் பிரதேசம், விதர்பா.
பி பிரிவு: ஆந்திரா, அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஐதராபாத், கர்நாடகா, பஞ்சாப், சவுராஷ்டிரா, திரிபுரா.
சி பிரிவு: பெங்கால், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிஷா, சர்வீசஸ். '
டிபிரிவு: தமிழ்நாடு, சண்டிகர், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், மும்பை, ரயில்வேஸ், ராஜஸ்தான், உத்தரகாண்ட்.
பிளேட் பிரிவு: அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம்.
தமிழக அணிக்காக வாஷிங்டன் சுந்தர், கர்நாடக அணிக்காக கே.எல். ராகுல், சவுராஷ்டிரா அணிக்காக ரவீந்திர ஜடேஜா, மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால், பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களம் காணுகின்றனர்.