யுஎஸ் ஓபன் 2024ல் இருந்து ரஃபேல் நடால் விலகல்; லேவர் கோப்பையில் பங்கேற்கிறார்
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை நியூயார்க்கில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் இருந்து டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் விலகுவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், செப்டம்பர் 20 முதல் 24 வரை பெர்லினில் நடைபெறும் Laver Cuo அணி போட்டியில் பங்கேற்பதை நடால் உறுதிப்படுத்தினார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். ரஃபேல் நடால் கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தங்கப் பதக்கம் வென்ற நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியுற்றார். இரட்டையர் சுற்றில் அவர் ஸ்பெயினுக்காக கார்லோஸ் அல்கராஸுடன் இணைந்தார். ஆனால், இந்த ஜோடி காலிறுதியில் வெளியேறியது.