
ஐபிஎல் 2025: முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறிய CSK
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணி முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
புதன்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் CSK தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிஎஸ்கே அணியின் சாம் கர்ரன் 88 ரன்கள், டெலவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஒரே ஓவரில் ஹாட்-ட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய பங்கு வகித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#IPLUpdate | சொந்த மைதானத்திலேயே மோசமான ஆட்டம்.. தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுகிறது CSK!#SunNews | #CSKvPBKS | #MSDhoni | #ChepaukStadium pic.twitter.com/157A9J4BL5
— Sun News (@sunnewstamil) May 1, 2025
பஞ்சாப் அணி
வெற்றிகரமாக 191 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி
பஞ்சாப் கிங்ஸ் அணி, 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கியது.
ஆரம்பத்தில் பிரியன்ஷ் ஆர்யார் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் 44 ரன்களுக்கு கூட்டணியை அமைத்தனர். பிரியன்ஷ் 23 ரன்கள் எடுத்துத் வெளியேறினார்.
பின்னர் பிரப்சிம்ரன், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருடன் சேர்ந்து 72 ரன்கள் கூட்டணியை அமைத்தார்.
பிரப்சிம்ரன் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக ஆடி, 42 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
சஷாங் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார், ஷெக்டே 1 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியாக, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 194 ரன்கள் எடுத்து சிறப்பான வெற்றியைப் பெற்றது.