Page Loader
தலைமன்னார் To தனுஷ்கோடி : ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை
தலைமன்னார் டு தனுஷ்கோடியை ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை

தலைமன்னார் To தனுஷ்கோடி : ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 18, 2023
04:48 pm

செய்தி முன்னோட்டம்

புனேவைச் சேர்ந்த நீச்சல் வீரர் சம்பண்ண ரமேஷ் ஷெலார் 21 வயதுக்குட்பட்ட பிரிவில் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை ஐந்தரை மணி நேரத்தில் நீந்தி கடந்துள்ளார். வியாழன் (மார்ச் 16) காலை 6.00 மணிக்கு தலைமன்னாரிலிருந்து அவரது நீச்சல் ஆரம்பித்து 29 கி.மீ தூரத்தை நிறைவு செய்து 11.26 மணிக்கு தனுஷ்கோடியை அடைந்தார். இதன் மூலம் இந்த பகுதியை அதிவேகமாக கடந்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் 8 மணி 26 நிமிடங்களில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதற்கிடையே, அகர்தலாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான சுசேதா டெப் பர்மன், 62 கிமீ தூரமுள்ள பாக் ஜலசந்தியை இருவழியாக நீந்தி கடந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய தூதரகம் ட்வீட்