Page Loader
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : முதல்முறையாக கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத்
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத்

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : முதல்முறையாக கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2023
12:22 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோகன்னசனுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். 2022 தாமஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் ஒரு பகுதியாக ஒரு போட்டியில் விளையாடிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பிரியன்ஷு ரஜாவத், ஞாயிறு அன்று நடந்த 68 நிமிட போராட்டத்தில் 21-15 19-21 21-16 என்ற கணக்கில் உலக தரவரிசையில் 49வது நிலை வீரரான ஜோகன்னசனை வீழ்த்தினார். இதன் மூலம் பிடபிள்யுஎப் சூப்பர் 300 பட்டத்தை முதன் முறையாக பிரியன்ஷு ரஜாவத் பெற்றுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பிரியன்ஷு ரஜாவத் வெற்றி