4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய ஹாக்கி அணி நான்காவது முறையாக பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிகமுறை ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் சாதனையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஹாக்கி அணியின் வெற்றியானது, வீரர்கள் வெளிப்படுத்திய இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கமான பயிற்சி மற்றும் அசைக்க முடியாத உறுதிக்கு ஒரு சான்றாக உள்ளது என்று எக்ஸில் (முன்னர் ட்விட்டர்) தெரிவித்துள்ளார்.